தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸ் நிவாரணப் பொருள்கள் பிரித்தெடுக்கும் பணி: அமைச்சர் ஆய்வு

கரூர்: தாந்தோன்றிமலை கிராமத்திற்கு கரோனோ நிவாரணப் பொருள்கள் பிரித்தெடுக்கும் பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

நிவாரணப் பொருட்கள் பிரித்தெடுக்கும் பணி
நிவாரணப் பொருட்கள் பிரித்தெடுக்கும் பணி

By

Published : Apr 26, 2020, 9:25 AM IST

கரோனா பாதிப்பு காரணமாக கரூர் மாவட்ட அதிமுக சார்பில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வழங்க தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருக்கக் கூடிய நிவாரணப் பொருள்களைப் பிரிக்கும் பணி நடைபெற்றது.

அதில் அரிசி, கோதுமை மாவு, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மொத்தமாக வாங்கி அவற்றை 1 கிலோ பாக்கெட்டுகளாகப் பிரித்து அந்தந்தப் பகுதிகளுக்குத் தனித்தனி வாகனங்கள் மூலம் அனுப்பிவைத்தார்.

நிவாரணப் பொருள்கள் பிரித்தெடுக்கும் பணி

இதில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தென்காசியில் நாளை முழு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details