கரூர்: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், பிப்ரவரி 4ஆம் தேதி கொங்கு மண்டல எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்..
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று (ஜன.5) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன், கட்சியின் மாநில வர்த்தக அணி செயலாளர் விசா.ம.சண்முகம், கரூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, கிழக்கு மண்டல இளைஞரணி செயலாளர் விக்னேஷ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கட்சியின் சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
'தீரன் சின்னமலை' பெயரை சூட்டுக:இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் கரூர் மாநகராட்சி சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாநகர புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை உடனடியாக துவக்க வேண்டும், கரூர்-திருச்சி நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சுங்க சாவடிகளை மத்திய, மாநில அரசுகள் அகற்ற வேண்டும், மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் நேரடியாக மணல் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, கரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, 'தீரன் சின்னமலை' பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிப்.4-ல் கொங்கு மண்டல எழுச்சி மாநாடு: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், 'கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், பிப்.4ஆம் தேதி 'கொங்கு மண்டல எழுச்சி மாநாடு' நடைபெற உள்ளது. வள்ளி கும்மி ஆட்டத்தை ஒரு சில அமைப்புகள் தடை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.