தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை! - Electronic Voting Mechanics Inspection

கரூர்: உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நிகழ்வு நடைபெற்றது.

electronic-voting-mechanics-inspection-in-karur

By

Published : Nov 7, 2019, 8:02 AM IST

கரூர் மாவட்டத்தின் பதினோரு பேரூராட்சி பகுதிகள் மற்றும் இரண்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

1,912 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 980 கட்டுப்பாட்டு கருவிகள் பெல் (BHEL) நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களால் முதல்நிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நிகழ்வு தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்றது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை

இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் உள்ளாட்சித் தேர்தலுக்கான மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வராஜ், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் சத்தியமூர்த்தி, ஜெயராணி, கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிக்க: "ஹாட்லைன்" வசதி அரசு மருத்துமனையில் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details