இந்தியா முழுவதும் 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் மே 19ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன்பிறகு வருகின்ற 23ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட முடிவுகள் வெளியாகிறது. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற முடிவிற்காக இந்திய மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை வெளியிடும் பணிகளை மாநிலம் முழுவதும் துரிதப்படுத்தி வருகிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் கரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..! - அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல்
கரூர்: தேர்தல் முடிவுகளை முன்னிட்டு கரூர் மக்களவைத் தொகுதி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், கரூர் மக்களவைத் தொகுதி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் காவல்துறையினரின் மூன்று அடுக்கு பாதுகாப்பின் கீழ் உள்ளனவா என்பதையும் கண்காணித்தனர்.