கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி, நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட கூடுதலாக எடுத்துச்செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் என அனைவரையும் கண்காணிக்க துணை ராணுவத்தினருடன் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
தேர்தல் 2021: குளித்தலையில் 65ஆயிரம் ரூபாய் பறிமுதல் - Flying squad seizes Rs 65,000 in Kulithalai
கரூர்: குளித்தலை வதியம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 65 ஆயிரம் ரூபாயைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
election Flying squad seizes Rs 65,000 in Kulithalai
இதன் தொடர்ச்சியாக இன்று காலை குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வதியம் பிரிவு சாலையில் பறக்கும்படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஈச்சர் டெம்போ வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட 65 ஆயிரம் ரூபாய் பறிமுதல்செய்து சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.