கரூர்:மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில், நேற்று (அக். 16) இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தொழில் வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் ஏற்றுமதி கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து அரசு மானியத்துட்ன் 100 தொழில்முனைவோருக்கு 8.18 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஒப்புதல் ஆணைகள், அரசினர் தொழிற்பயிற்சி மையம் மற்றும் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆணைகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
மேலும், தொழில் நிறுவனங்களுக்கு ஒரு முனையில் புதிய உரிமங்கள் என்ற ஒற்றை சாளர கண்காணிப்பு இணைய முகவையை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, சிஐஐ தலைவர் புஷ்பராஜன், துணைத்தலைவர் வெங்கடேசன், திறன் பயிற்சி மற்றும் மேம்பாட்டு தலைவர் முருகானந்தம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி, அனைத்து வங்கியாளர்கள், ஒன்றியம் மற்றும் மாநில அரசின் துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
விரைவில் நிறைவேற்றப்படும் தேர்தல் வாக்குறுதிகள்
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “கரூரின் தொழில் வளர்ச்சிக்காக சாயப்பட்டறை பூங்கா 100 விழுக்காடு அமைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் 200 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.