கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் வாங்கலில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், இன்று மாலை கரூருக்கு வந்துவிட்டு இரு சக்கர வாகனம் மூலம் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்போது வெங்கமேடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அரசு பேருந்து மோதி மின்வாரிய ஊழியர் பலி - EB employee
கரூர்: அரசு பேருந்து மோதி மின்வாரிய ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கரூரில் மின்வாரிய ஊழியர் பலி.
அப்போது எதிரே வந்தஅரசு பேருந்து மோதி கீழே விழுந்த ராஜசேகரின் மீதுபேருந்தின் பின் சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ராஜசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கோர விபத்து குறித்து பொதுமக்கள் வெங்கமேடு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து வெங்கமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.