தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடன் தொல்லையால் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை! - karur Suicide cases

கரூர்: கடன் தொல்லை காரணமாக ஓட்டுநர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை  கரூரில் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  Driving fire commits suicide  Driving fire commits suicide in karur  karur Suicide cases  Karur Collector Office
Driving fire commits suicide

By

Published : Dec 11, 2020, 10:47 AM IST

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அருகேயுள்ள அருணாசலம் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (40). ஓட்டுநரான இவர், சுதா டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் தொழில் செய்துவந்துள்ளார். இந்நிலையில், பாஸ்கரன் நேற்று இரவு (டிச. 10) சுமார் 11.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது டிராவல்ஸ் வாகனத்தை நிறுத்திவிட்டு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தாந்தோன்றிமலை காவல் துறையினர் பாஸ்கரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கந்து வட்டி, கடன் பிரச்சினைகளால் நடக்கும் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் முன்விரோதத்தால் கட்டடத் தொழிலாளி படுகொலை!

ABOUT THE AUTHOR

...view details