கரூர் மாவட்டத்தில் கோடைகாலம் நிலவுவதால் அடுத்து பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது. குறிப்பாக அழகியநத்தம், சின்னதாராபுரம், அரவக்குறிச்சி போன்ற பெருநகரங்களில் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவித்துவருகின்றனர்.
இருப்பினும் கரூர் நகராட்சியிலிருந்து திருமாநிலையூர், தாந்தோன்றிமலை, ராயனூர் போன்ற பகுதிகள் வழியாக ஈசநத்தம் வரை செல்லும் சாலையில் அமைந்துள்ள காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் பலமுறை சீரமைத்து சரிவர இயங்காமல் குடிநீர் வீணாகிச் செல்கிறது. வீணாகச் செல்லும் குடிநீரை மக்கள் கூட்டமாக எடுத்துச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.