தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் நுழைவுத் தேர்வை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்! - கரூர் மாவட்ட செய்திகள்

திருச்சி, கரூர் ஆகிய இடங்களில் நீட் நுழைவுத் தேர்வை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் நுழைவு தேர்வை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நீட் நுழைவு தேர்வை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

By

Published : Aug 27, 2020, 4:20 PM IST

மருத்துவக் கல்வியில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை கண்டித்து தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறன. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வை கண்டித்து இன்று (ஆக.27) திருச்சியில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புத்தூர் பெரியார் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் மாவட்ட தலைவர் ஆரோக்கிய ராஜ் தலைமை வகித்தார்.

மேலும் இதில் மாவட்ட செயலாளர் மோகன் தாஸ், செயலாளர் பாலசுப்பிரமணியன், பானுமதி, மகாமணி, ராஜசேகர் , துரைசாமி, குணசேகரன், மணியன், அன்பழகன், இளைஞரணி சேவியர், முபராக், முருகன், திருநாவுக்கரசு, கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி கரூர் கடைவீதி காமராஜர் சிலை முன்பு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திராவிட கழக பொதுக்குழு உறுப்பினர் அன்பு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் வைரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, "மத்திய அரசே நீட் தேர்வை திணிக்காதே. தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: நீட் தேர்வு: 'விலக்கு அளித்தால் மட்டும் எதுவும் மாறிவிடாது' - பொன். ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details