தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடு வீடாக கரோனா பரிசோதனை: கலெக்டர் உத்தரவு!

கரூர்: கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே கோரிக்கை விடுத்துள்ளார்.

வீடு வீடாக சென்று கரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய கலெக்டர் உத்தரவு!
வீடு வீடாக சென்று கரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய கலெக்டர் உத்தரவு!

By

Published : May 25, 2021, 12:39 PM IST

கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது, கரோனா பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டாலும், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் சாதாரணமான காய்ச்சல், இருமல் என அலட்சியமாக தங்கள் பகுதிக்கு உள்ளே சுற்றித் திரிகின்றனர்.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு வடநேரே, 'கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் வீடு வீடாக சென்று சளி காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல், இருமல், உள்ளவர்களை கணக்கெடுக்கவும், கரோனா அறிகுறிகள் உள்ளவர்களை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி உள்ளனர். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வீடு தேடி வரும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தேவைப்படும் தகவல்களை அளித்து கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: உஷாரான ராஜகோபாலன்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ABOUT THE AUTHOR

...view details