தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் கறுப்புக் கொடி ஏந்தி திமுகவினர் ஆர்பாட்டம்! - திமுக

கரூர்: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் அதற்கு ஆதரவு அளித்து வரும் அதிமுக அரசை கண்டித்து திமுகவினர்ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Agriculture act
Farmers issue

By

Published : Dec 5, 2020, 6:50 PM IST

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், வேளாண் சட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அதிமுக அரசைக் கண்டித்தும், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாத்து இந்திய வேளாண்மை வீழாமல் தடுக்கவும் கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி மாபெரும் அறவழி ஆர்ப்பாட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் கறுப்பு சட்டை அணிந்து, கறுப்பு கொடி ஏந்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, மாநில சட்ட துறை இணை செயலாளர் மணிராஜ், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ராமர், கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details