கரூரில் மாவட்ட ஊராட்சி கூட்டம் இன்று (செப்டம்பர் 16) நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி தலைவர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊராட்சி கூட்டத்தில், திமுக உறுப்பினர்கள் மூவர் உள்பட 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்: திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு! - திமுக வெளிநடப்பு
கரூர்: மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், கரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டார் என பாராட்டி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக உறுப்பினர்கள் கார்த்தி, தேன்மொழி, நந்தினி ஆகிய மூவரும் வெளிநடப்பு செய்தனர்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொண்டுவரும், திட்டங்கள் குறித்து அலுவலர்கள் விளக்கி கூறினர். அதேபோல் வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டுகளுக்குத் தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர்.