கரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி நேற்றிரவு (மார்ச்.18) நெரூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் என் மீது புகார் அளித்துள்ளார்கள். கரூர் மாவட்டம் தவிர்த்து காவிரி ஆற்றில் மணல் எடுக்க நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் பொதுப்பணித்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் உள்ளூர் தேவைகளுக்கு மணல் அள்ள உரிய அனுமதியை அரசு வழங்கியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இரவு நேரங்களில் காவிரி ஆற்றங்கரையில் மாட்டு வண்டி மூலம் மணல் எடுக்க கடந்த ஐந்து ஆண்டுகளில் சில நாள்கள் அனுமதித்தார்கள். பல நாள்கள் அனுமதி மறுத்தார்கள். உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுகவினர் மாட்டுவண்டி உரிமையாளர்களை மிரட்டி ”அதிமுகவுக்கு வாக்களித்தால்தான் மீண்டும் மணல் அள்ள அனுமதி பெற்று தருவோம்” எனக் கூறினர்.