தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் செயல்படும் கரூர் ஆட்சியர்' - திமுக குற்றச்சாட்டு - Karur Collector Malarvizhi

கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் செயல்படுவதாக திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் மணிராஜ் குற்றஞ்சாட்டினார்.

DMK
DMK

By

Published : Nov 25, 2020, 7:07 PM IST

கரூர் மாவட்ட திமுக சட்டத் துறை சார்பில் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வாக்குச்சாவடி பிரதிநிதி என்ற முறையில் இன்று (நவ. 25) அம்மாவட்ட திமுக பொறுப்பாளர் வி. செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சித் தலைவர் மலர்விழி ஆகியோரிடம் புகார் மனுவினை திமுக சட்டத் துறை இணை செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “கடந்த நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டுக்கு அனுப்பப்பட்டது.

அவர் பரிசீலனைசெய்து பரிந்துரைக்கும் வாக்காளர்களை மட்டுமே சேர்க்க மாவட்ட ஆட்சியர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்.

மேலும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் குறித்து இன்று அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் இன்னும் மூன்று தினங்களில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளோம்.

இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தேர்தல் அலுவலர்கள் ஆகியோரை இணைத்து எதிர் மனுதாரராகச் சேர்த்து வழக்குத் தொடர இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடைபெறும் வகையில் தற்பொழுது உள்ள கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடர்ந்து செயல்பட்டுவருவதால் மாவட்ட தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும் எனவும், வாக்காளர் வரைவுப் பட்டியலை மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details