கரூர் மாவட்டம் தாந்தோனி, க.பரமத்தி, கரூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு ஒன்றியங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
தற்போது கரூர் ஒன்றியம் ராமேஸ்வரம் பட்டியில் திமுக அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி வாக்குப்பதிவு செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இதுவரை தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஒன்றியங்களுக்கு என மொத்தமாக நடைபெற்ற இந்த தேர்தல் தற்போது ஒன்றியங்களுக்கு மட்டும் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களுக்குள் கேமராக்கள் வைக்கப்பட்டு வாக்குப்பதிவை பதிவு செய்து வந்தனர்.