திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 16) நாமக்கல்லில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, கரூர் வழியாக திண்டுக்கல் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்வதற்காகச் சென்றார். அப்போது, கரூர்- நாமக்கல் எல்லையான காவிரி ஆறு தவிட்டுப்பாளையம் பாலம் பகுதியில், கரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக தலைவருக்கு கரூர் எல்லையில் உற்சாக வரவேற்பு - stalin election campaign
கரூர்: திண்டுக்கல் தேர்தல் பரப்புரைக்குச் சென்ற மு.க. ஸ்டாலினுக்கு, கரூர் மாவட்ட எல்லையில் திமுகவினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக
இதில் கரூர் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ, திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் நொய்யல் சேகர், கரூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு திமுக தலைவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க:திருவொற்றியூரில் பரப்புரை மேற்கொண்ட டிடிவி தினகரன்!