கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததில் இருந்து பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த மாதம் கரூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய பொழுது, மற்ற திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முன்னுதாரணமாக செந்தில்பாலாஜி இருக்கிறார் என புகழ்ந்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: கரூரில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! - திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி பிப்ரவரி 21ஆம் தேதி கரூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
DMK leader stalin Birthday: Grand Employment Camp in Karur
இதனிடையே கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ செந்தில்பாலாஜி, கரூர் மாவட்டத்தில் பிப்ரவரி 21ஆம் தேதி 70க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
இம்முகாமில் கரூர் மாவட்டத்திலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறவும் அழைப்பு விடுத்துள்ளார்.