கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இம்முறை திமுக நேரடியாக மூன்று தொகுதிகளில் அதிமுகவையும், ஒரு தொகுதியில் பாஜகவையும் எதிர்த்துப் போட்டியிடுகிறது. இது குறித்து வழக்கறிஞர் சிவகாமசுந்தரி நமது ஈடிவி பாரத் தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள சிறப்பு நேர்காணல் குறித்து காண்போம்.
- கிருஷ்ணராயபுரம் தனித்தொகுதியில் போட்டியிடும் உங்களுக்குப் பொதுமக்களிடம் வரவேற்பு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
“கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்டுவந்த அதிமுக அரசு தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்கு எதிராக நீட்தேர்வு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், ஹிந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு போன்றவற்றை ஆதரிப்பதால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி காரணமாக பொதுமக்கள் திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என என்னிடம் தெரிவிக்கிறார்கள். ஆகவே எனக்கு வெற்றி வாய்ப்பு இப்பகுதியில் அதிகமாக உள்ளது”.
- சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிப் பெற்றால் எந்த மாதிரியான மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைக்க முன்னுரிமை வழங்கி செயல்படுத்துவீர்கள்?
“கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி என்பது பெரும்பாலும் கிராமப்புறங்களை உள்ளடக்கிய பகுதி. இங்குள்ள ஊராட்சிகளில் ஆழ்குழாய் குடிதண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. காவேரி ஆற்றங்கரை அறியாமையில் முறையான கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாததால், கரூர் மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்குக் காவிரி கூட்டு குடிநீர் முறையாக வழங்கப்படுவதைப்போல கிருஷ்ணராயபுரம் தொகுதிகளிலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்தி, குடிநீர் பிரச்னையை முதலில் தீர்க்க முன்னுரிமை வழங்குவேன்.