தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக, அதிமுக ஐடி விங் அடிதடி: திமுக குழு உறுப்பினர்கள் கைது - திமுக அதிமுக ஐடி விங் உறுப்பினர்கள் அடிதடி

கரூர்: முதலமைச்சர் குறித்து முகநூலில் விமர்சனம் செய்த திமுக ஐடி விங் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

dmk it wing members arrested in karur
dmk it wing members arrested in karur

By

Published : May 16, 2020, 8:36 PM IST

கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் முகநூல் பக்கத்தில் திமுகவைச் சேர்ந்த ஐடி விங் குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சரை விமர்சித்து முகநூலில் நேற்று (மே 15) பதிவிட்டனர்.

முகநூல் விமர்சனம்

இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த ஐடி விங் குழு உறுப்பினர் தினேஷ் என்பவர் திமுகவைச் சேர்ந்த ஐடி விங் குழு உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் இரு தரப்பினர் இடையே அடிதடி வரை கொண்டுச் சென்றது. இதில் தினேஷுக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பின்பு காவல்துறையினருக்கு அளித்த புகாரின்பேரில், இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், திமுகவைச் சேர்ந்த ஐந்து நபர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதன் பின்னர் ராஜேஷ் கண்ணன், தீபக், ரவிக்குமார், கௌதம், ரீகன் ஆகிய ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அதிமுக திமுக இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க... அதிமுக பிரமுகர்களை தாக்கிய கும்பல்: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details