தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் குடும்ப விழாவில் அலுவலர்கள் பங்கேற்பு: திமுகவினர் புகார்

கரூர்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறக்கட்டளை விழாவில் 144 விதியை மீறி பங்கேற்ற அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் புகார் மனு அளித்தனர்.

அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அறக் கட்டளைக்கு எதிராக திமுக சார்பில் புகார் மனு
அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அறக் கட்டளைக்கு எதிராக திமுக சார்பில் புகார் மனு

By

Published : Oct 7, 2020, 8:22 PM IST

கரூர் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் எம்.ஆர்.பி. அறக்கட்டளை சார்பில் தொற்று பரவும் நேரத்தில் அதிக நபர்களை வைத்து நிகழ்ச்சி நடந்தப்பட்டுள்ளதாக திமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ காமராஜ், மாநிலச் சட்ட இணைச் செயலாளர் மணிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து புகார் மனு ஒன்றினை அளித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில சட்ட இணைச் செயலாளர் மணிராஜ் பேசுகையில், “எம்.ஆர்.பி. அறக்கட்டளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் என்ற தனிப்பட்ட நபரின் அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், மாவட்ட திட்ட கூடுதல் இயக்குநர் கவிதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

அதிலும் குறிப்பாக கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில், கோவை சாலையில் உள்ள தனியார் மண்டபத்திற்கு ஊர்வலமாக அதிக நபரை திரட்டி நிகழ்ச்சி நடத்தி இருப்பது கரோனா வைரஸ் பரவும் நேரத்தில் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண் டிருக்கின்றனர்.

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறக்கட்டளைக்கு எதிராக திமுக சார்பில் புகார் மனு

இது தொடர்பாக ஐஜி, டிஜிபி முக்கிய நபர்களுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கரூர் நகர பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அதன் நகலைச் சமர்ப்பிக்கவந்தோம்.

இருப்பினும் காவல் ஆய்வாளர் உதயகுமார் நாங்கள் வருவதைத் தெரிந்துகொண்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் உதவி ஆய்வாளரிடம் மனு அளித்துள்ளோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...தொடரும் மருத்துவர்கள் போராட்டம்: மருத்துவமனையில் ஹாயாக ரெஸ்ட் எடுக்கும் நாய்கள்...!

ABOUT THE AUTHOR

...view details