கரூர் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால், கருப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 2013ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், கரூர் நகராட்சி நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
கரூர் பேருந்து நிலையத்தை உடனடியாக அமைக்கக் கோரி திமுக நிர்வாகிகள் உண்ணாவிரதம் - DMK agitation demanding removal of bus station
கரூர்: புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட திமுக நிர்வாகிள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![கரூர் பேருந்து நிலையத்தை உடனடியாக அமைக்கக் கோரி திமுக நிர்வாகிகள் உண்ணாவிரதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5135303-thumbnail-3x2-krr.jpg)
ஆகவே இதனை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி, குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ராமர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் கந்தசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில துணைச்செயலாளர் விசா சண்முகம், மதிமுக மாவட்ட செயலாளர் கபினி சிதம்பரம், திராவிட கழக மாவட்ட தலைவர் குமாரசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தருமபுரியில் அதிமுக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!