தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக - அதிமுக இடையே விளம்பரப் பதாகை வைப்பதில் பிரச்சனை : பாதித்த போக்குவரத்து! - karur dmk admk flex banner issue

கரூரில், தாங்கள் வைத்த டிஜிட்டல் பேனர் மீது அதிமுகவினர் பேனர் வைத்ததாகக் கூறி திமுகவினர் திரண்டதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

karur dmk admk flex banner problem
திமுக-அதிமுக விளம்பரப் பதாகைகள் பிரச்சனை: அமராவதி ஆற்றுப் பாலத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

By

Published : Oct 24, 2020, 7:29 PM IST

கரூர்:கரூர் மாவட்டம் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமராவதி ஆற்றுப்பாலத்திற்கு அருகில் பெரிய அளவிலான விளம்பரப் பதாகை வைக்கும் இடம் உள்ளது. இங்கு, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரான செந்தில் பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி திமுகவினர் சார்பில் டிஜிட்டல் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

விளம்பர டிஜிட்டல் பேனர் நிறுவனத்திடம் எட்டு நாள்கள் வரை அனுமதி பெற்று இந்த பேனர் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்.24) காலை அதே டிஜிட்டல் பேனர் மீது அதிமுகவினர் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். இது தொடர்பாக தகவலறிந்து அப்பகுதியில் திமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமரவாதி ஆற்றுப் பாலத்தில் திரண்ட திமுகவினர்

இதனையடுத்து அங்கு வந்த கரூர் நகரக் காவல் நிலைய போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் திமுகவினர் சமாதானம் அடையாத நிலையில், அவர்களை கரூர் நகரக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக கரூர், திருமாநிலையூர் அமராவதி ஆற்று மேம்பாலத்தில் திமுகவினர் திரண்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:மின்கம்பியில் பறந்து விழுந்த விளம்பர பேனரால் 2 மணிநேரம் மின்தடை

ABOUT THE AUTHOR

...view details