தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில், கலைஞர் அறிவாலயத்தில் பெரியார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினர்கொண்டாடினர்.
ரத்த தானம் செய்த செந்தில் பாலாஜி - DMK Party
கரூர் : திமுகவின் 72ஆவது ஆண்டு தொடக்க விழாவில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி ரத்த தானம் செய்தார்.
dmk
அதனைத் தொடர்ந்து திமுகவின் 72ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத்த தான முகாமில் செந்தில் பாலாஜி உள்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், கரூர் தன்னார்வ ரத்த வங்கியில் ரத்த தானம் செய்தனர்.