கரூர் மாவட்டத்தில் லாலாப்பேட்டை, குளித்தலை பகுதிகளில் வாழை பயிரிடுவது வழக்கம். ஆனால் தற்போது பருவமழை பெய்த நிலையில், இங்கு வாழை பயிரிடும் முறை குறைந்துள்ளது.
வாழைப் பழங்களின் விலை கிடு கிடு உயர்வு! - பழங்கள் விலை அதிகரிப்பு
கரூர்: தீபாவளி பண்டிகையையொட்டி சந்தையில் வாழைப் பழங்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
diwali celebrations banana prices high
கற்பூரவல்லி, ரஸ்தாளி, பூவம் ஆகிய வாழைப்பழங்கள், குளித்தலை, லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், சுந்தலவாடி, எல்லப்பாளையம், கள்ளப்பள்ளி, கருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் வாழைப்பழம் வரத்து குறைந்துள்ளதால், தீபாவளி பண்டிகையையொட்டி 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட வாழைப்பழங்கள் தற்போது 30 ரூபாய்யிலிருந்து 40 வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.