கரூர்:மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிரபு சங்கர் தினந்தோறும் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.
மருத்துவமுகாமில் பங்கெடுத்த மாவட்ட ஆட்சியர்
இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கருப்பத்தூர் ஊராட்சி, வேங்காம்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
வீடு வீடாக சென்ற ஆட்சியர்
தொடர்ந்து அங்குள்ள ஊராட்சி பகுதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
மாவட்டத்தில் தொற்றை விரைவில் கட்டுப்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் பார்வையில் உள்ள கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டார்.