கரூர் மாவட்டத்தில் வறட்சியான பகுதிகளில் க.பரமத்தி பகுதி ஒன்றாகும். நீர் ஆதாரங்களை பெருக்கும் வகையிலும், அப்பகுதியில் நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையிலும், மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையிலும், தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தடுப்பணை பணி குறித்து ஆட்சியர் அன்பழகன் ஆய்வு - தென்னிலை கிழக்கு ஊராட்சி
கரூர்: க.பரமத்தி ஊராட்சிக்கு உட்பட்ட தென்னிலை கரை பாளையத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தடுப்பணையை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் சென்று ஆய்வு
அதன் ஒரு பகுதியாக, பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்னிலை கிழக்கு ஊராட்சி பகுதியில் 9 லட்சத்து 90 ஆயிரத்து மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்பு, விவசாயிகளுக்கு கடைமடை வரை நீர் செல்வதற்கும், குளம் குட்டைகளை தூர்வாரும் பணிகள் மற்றும் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.