கரூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ள சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் நகராட்சிப் பெட்டிகள் அல்லது ஓலைகள் அமைத்து கடைகள் கட்டிக்கொள்ள நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், அனுமதியை தவறான முறையில் பயன்படுத்தி சுற்றுச்சுவர் அமைத்து கடைகளைக் கட்டி வியாபாரம் செய்துவந்ததாகத் தெரிகிறது.
நகராட்சிக்குச் சொந்தமான இடத்திலிருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம் - கரூரில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்திலிருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்
கரூர்: நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட கடைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது.
Disposal of Occupancy Shops in the karur Municipal Area
ஆக்கிரமிப்பு குறித்து நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரித்தும், ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் கடைகளை அகற்றாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தின் நகர அமைப்பு அலுவலர் அன்பு தலைமையில், ஜேசிபி வாகனங்களைக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டது. அப்போது அக்கடையின் வியாபாரி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பாமக வேட்பாளர் ஏமாற்றி வெற்றிபெற்றதாகக் கூறி 5 பேர் மனு