கரூர் ரயில் நிலையத்தில் ஜனவரி 28ஆம் தேதி தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக கரூர் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக மரங்கள், செடிகள், குப்பைத்தொட்டி, வர்ணம் தீட்டுதல், மின்சார இணைப்பு, ரயில்வே பாதை, பேட்டரி கார் வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதனால் புதிதாக பேட்டரி கார் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அன்றைய தினம் ரயில்வே மேலாளர் ஜான் தாமஸ் திறந்துவைக்க உள்ளார்.