நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் ராஜா(42). இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவரது மனைவி சுதாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மகள் சாக்ஷியாவுடன், அண்ணன் வீட்டில் சுதா வசித்து வந்துள்ளார். இருந்த போதிலும், தினமும் தொலைபேசி வாயிலாக சுதாவை தொடர்புகொண்டு ராஜா தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மகள் சாக்ஷியா, அம்மாவை (சுதா) திட்டினால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று தந்தை ராஜாவிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் இதை பொருட்படுத்தவில்லை.
குடும்பத் தகராறில் தாய், மகள் விஷமருந்தி தற்கொலை - தாய் மகள் தற்கொலை
கரூர்: குடும்பத் தகராறில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் சுவாமி கோயிலுக்கு சென்ற சுதா மற்றும் மகள் சாக்ஷியா, அருகில் இருந்த தென்னந்தோப்பிற்கு சென்று விஷமருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சாக்ஷியா அங்கேயே இறந்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சுதா உயிர் போகும் நிலையில் கூச்சலிட்டுள்ளார். இதையறிந்த அருகிலிருந்தவர்கள் சுதாவை மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுதா இறந்து விட்டார். இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.