தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாயனூர் கதவணையில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் அதிகரிப்பு: பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு! - மாயனூர் கதவணை

மாயனூர் கதவணையில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் அதிகரிப்பால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுள்ளது.

தண்ணீர் திறக்கப்பட்ட மாயனூர் கதவணை
தண்ணீர் திறக்கப்பட்ட மாயனூர் கதவணை

By

Published : Sep 19, 2020, 5:47 PM IST

கரூர்:மாயனூர் கதவணையில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் அதிகரத்துள்ளதால், பாசனவசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் காவிரி ஆறு மாயனூர் கதவணையில் 15 ஆயிரம் கன அடிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மாயனூர் கதவணையிலிருந்து பாசன வசதிக்காக கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த செப்.15 ஆம் தேதி அதிகபட்சமாக 6ஆயிரத்து 922 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று (செப்.18) காலை முதல் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் இன்று (செப். 19) காலை 6 மணி நிலவரப்படி, கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு 15ஆயிரத்து 415 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, மாயனூர் கதவணையிலிருந்து 14ஆயிரத்து 415 கனஅடி தண்ணீர், 45 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், விவசாயத் தேவைகளுக்காகக் கட்டளை மேட்டு வாய்க்காலில் விநாடிக்கு 300 கனஅடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் விநாடிக்கு 400 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து, தென்கரை வாய்க்காலில் 500 கனஅடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தண்ணீர் திறக்கப்பட்ட மாயனூர் கதவணை

16.72 அடி உயரம் கொண்ட மாயனூர் அணையில் தற்போது, 14.76 அடி உயரம் தண்ணீர் இருப்பு உள்ளது. சுமார் 1 டிஎம்சி வரை தண்ணீர் தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 702.08 கன அடி தண்ணீர் இருப்புவுள்ளது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 8ஆயிரத்து 493 கனஅடி தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:10 ஆண்டுகளுக்குப் பிறகு காமராஜர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details