தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கட்சி பாகுபாடின்றி நாளை கொண்டாடப்படவுள்ளது. அண்ணாவின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடத்தி பரிசு வழங்கும் நிகழ்ச்சியை கரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் பந்தயம் - cycle race
கரூர்: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ. மாணவிகளுக்கான சைக்கிள் போட்டியை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அந்தவகையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சைக்கிள் போட்டியை, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இப்போட்டியில் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். 13, 15, 17 வயதுக்குட்பட்டோர் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.
இப்பந்தயமானது அலுவலக வளாகத்தை ஐந்து முறை சுற்றி மொத்தம் பத்து கிலோமீட்டர் தூரம் வரும்படி நடத்தப்பட்டது. முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.