தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

களவு போன ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு அலைபேசிகள் மீட்பு: சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை!

தொலைந்துபோன சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நவீன செல்போன்களை மீட்ட கரூர் சைபர் கிரைம் காவலர்கள் அவைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

3 லட்சம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன்கள் கைப்பற்றல்
3 லட்சம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன்கள் கைப்பற்றல்

By

Published : Aug 15, 2021, 12:35 AM IST

கரூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பல்வேறு சம்பவங்களில் காவல் நிலையங்களில் பதியப்பட்ட புகார்களில் பதிவு செய்யப்பட்ட சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் காணமால் போன வழக்குகளை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு,செல்போன்களை காவல்துறையினர் மீட்டனர்.

சைபர் கிரைம் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி, ஆய்வாளர் அம்சவேணி, உதவி ஆய்வாளர் சுதர்சன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை குழுவினர் மாவட்டத்தின் காவல் நிலையங்களில் உள்ள சைபர் கிரைம் வழக்குகளாக பதிவுசெய்யப்பட்ட செல்போன் திருட்டு, காணாமல் போன செல்போன்களை கண்டறிவதற்காக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பொதுமக்களுக்கு அறிவுரை

விசாரணையில் 206 ஆண்ட்ராய்டு செல்போன்கள், நவீன செல்போன்களின் ஐஎம்இஐ எண்ணைக் கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டு செல்போன்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், "பொதுமக்கள் ஆன்லைன் பொருள்கள் வாங்கும்போதும், குழந்தைகள் செல்போன் உபயோகிக்கும் போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

மேலும், ஆன்லைன் மோசடிகளுக்கு மிக முக்கியமான காரணம் அறியாமை. பொதுமக்கள் விழிப்புணர்வோடு குற்ற சம்பவங்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் நிறுவனங்களில் மட்டுமே பொருள்கள் வாங்குவதை பொதுமக்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்" என பொதுமக்களிடம் எடுத்துக் கூறினார்.

இதையும் படிங்க: 'விவசாயிகள் போராட்டத்தை வலுவானதாக மாற்ற திட்டம் - தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்'

ABOUT THE AUTHOR

...view details