தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் கரோனா: குறையும் பாதிப்பு, அதிகரிக்கும் உயிரிழப்பு - Corona in Karur

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கரூரில் கரோனா
கரூரில் கரோனா

By

Published : Jun 19, 2021, 7:42 PM IST

கரூர்: கரோனா 2ஆம் அலை தாக்கத்தால் தமிழ்நாடு அரசு தளர்வுகள் அறிவிக்கப்படாத 11 மாவட்டங்களில் ஒன்றாகக் கரூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டு, கரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்டத்தின் பல்பேறு இடங்களில் காய்ச்சல் மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் 5ஆம் தேதி அதிக பட்சமாக 633 ஆக இருந்தது.

இன்று காலை நிலவரப்படி, ஆர்டிபிசிஆர் சோதனைசெய்து கொண்டவர்களில் புதிதாக மூன்று குழந்தைகள் உள்பட 51 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரூரில் கரோனா
முதல் வாரத்தில் பாதிப்பு - 2,699இரண்டாம் வாரத்தில் பாதிப்பு - 1,094மூன்றாவது வாரத்தில் பாதிப்பு - 542 தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும் இறப்பு எண்ணிக்கை குறையவில்லை.

இன்றுவரை இம்மாதத்தில் மட்டும் 121 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கரூரில் கரோனா
ஏப்ரல் மாத தொடக்கத்தில்சிகிச்சையில் - 55மொத்த உயிரிழப்பு - 52மொத்த பாதிப்பு - 5,658மே மாத தொடக்கத்தில்

சிகிச்சையில் - 997
உயிரிழப்பு - 58
மொத்த பாதிப்பு - 7,741

ஜூன் மாத தொடக்கத்தில்


சிகிச்சையில் - 3,431
உயிரிழப்பு - 222
மொத்த பாதிப்பு - 17,598

இன்று (ஜூன் 19) வரை
சிகிச்சையில் - 856
மொத்த உயிரிழப்பு - 330
மொத்த பாதிப்பு - 21,165

கரோனா தொற்று ஏப்ரல் மாதத்தில் 2ஆம் அலை தொடங்கினாலும் மே முதல் ஜூன் வரை உச்சத்தை அடைந்துள்ளது. முதல் அலை நிறைவுற்றபோது கரூர் மாவட்டத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 55 ஆக இருந்தது. இன்று 330 ஆக உயர்ந்துள்ளது.

உச்சத்தில் இருந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 275 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஏப்ரல் - கரோனா பாதிப்பு 2,083 பேர்
மே - கரோனா பாதிப்பு 9,857 பேர்
ஜூன் 18 வரை - கரோனா பாதிப்பு 3,567 பேர்

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இறப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

கரூரில் கரோனா
இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் மருத்துவர் சந்தோஷ்குமார் கூறுகையில், "கரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களில் மட்டும் சுமார் 19 ஆயிரம் பேருக்குதடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 23 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. இதனால் கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை எட்டியுள்ளது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கடைபிடித்தால் தொற்று எண்ணிக்கையே குறைக்க முடியும்" என தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் முழுமையாக கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் மட்டுமே தீர்வாக அமையும், தளர்வுகள் தீர்வாக அமையாது எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details