கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். அதற்கான பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையுடன் தேர்தல் பணியாற்றிய கூட்டணிக் கட்சியினர் பாஜக நிர்வாகிகள் இதனால் கலக்கமடைந்துள்ளனர்.