திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த யேசுதாஸ்(35)-சிந்தாமணி(29) தம்பதி வளையல் வண்டியில்பேன்சி பொருள்கள் வியாபாரம் செய்துவந்தனர். இவர்களுக்கு இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் வீரப்பூர் கோயில் திருவிழாவில் மூன்று நாள்களாக வியாபாரம் செய்துவிட்டு, நேற்று(மார்ச்.10) குடும்பத்துடன் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வண்டி கரூர் மாவட்டம் பாலவிடுதி சேவாப்பூர் வளைவு அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.