நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அதில் இந்திய அளவில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவால் ஒரு இடத்தில்கூட முன்னிலை பெற முடியவில்லை. திமுக கூட்டணி 30க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அந்தவகையில், கரூர் மக்களவைத் தொகுதியில் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரையைவிடவும் முன்னிலை வகித்துவந்தார்.
கரூரில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் - jyothimani
கரூர்: கரூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
voting
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளும், முதல் சுற்று வாக்குகளும் எண்ணப்பட்ட சூழலில் தற்போது வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டதால் வாக்கு எண்ணும் மையத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Last Updated : May 23, 2019, 12:16 PM IST