கரூர் மாவட்டம், காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது. கரூர், திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று (மே12) புதிதாக 246 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், 215 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 1482 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மே ஒன்று முதல் நேற்று வரை 59 உயிரிழந்தனர்.
கரோனா தொற்று: கரூரில் 12 நாட்களில் 59 பேர் உயிரிழப்பு!
கரூரில், கடந்த 12 நாட்களில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 59 பேர் உயிரிழந்தனர்.
கரோனா வைரஸ்
கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சிங்கப்பூரிலிருந்து 256 காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், கண்டெய்னர்கள் வருகை!
Last Updated : May 13, 2021, 3:05 PM IST