கரூர் நகராட்சி சார்பில், பேருந்து நிலையத்தில் கடந்த மே 18ஆம் தேதி முதல் தற்காலிக காய்கறிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொற்று பரவலைத் தடுக்க காய்கறி வியாபாரிகளுக்குக் கரோனா பரிசோதனை!
கரூர்: காய்கறிச் சந்தையில் கரோனா பரவலைத் தடுக்க வியாபாரிகளுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Corona testing for vegetable traders to prevent corona spread!
இங்கே உள்ளூர் சில்லறை வியாபாரிகள், கரூர் நகரத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் காலை 10 மணி வரை, காய்கறிகள் வாங்கிச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், காய்கறிச் சந்தையின் மூலம் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (மே 21) கரூர் பேருந்து நிலையம் பகுதியில் 70க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகளுக்குக் கரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.