தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் மாவட்டத்தில் கரோனா நிலவரம்! - கரூர் மாவட்டத்தில் கரோனா நிலவரம்

கரூர்: மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

Karur GH
Karur GH

By

Published : May 19, 2021, 5:39 PM IST

கரூர் மாவட்டத்தில் இன்று (மே 19) காலை நிலவரப்படி புதிதாக 121 பெண்கள், 182 ஆண்கள் என மொத்தம் 303 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் கரோனா சிறப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 116ஆக உள்ளது. மொத்த பாதிப்பு 12ஆயிரத்து 202ஆக உயர்ந்துள்ளது.

மே 1ஆம் தேதி முதல் இன்று (மே 19) வரை சுமார் 5 ஆயிரத்து 207 பேருக்குப் புதிதாக தொற்று ஏற்பட்டதில், 86 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சையில், 2 ஆயிரத்து 284 பேர் உள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்பிவருகின்றன.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் - 3, ஐசியூ படுக்கைகள் - 4, ஆக்ஸிஜன் அல்லாத படுக்கைகள் - 262 ஆகியவை மட்டும் இருப்பு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details