கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 21 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரண பொருள்கள் வழங்கும் விழா கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 23) நடைபெற்றது.
கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ. 21. 65 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் - கரோனா பாதுகாப்பு உபகரணங்கள்
கரூர்: தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்ற போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ரூ. 21. 65 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை பயனர்களுக்கு வழங்கினார்.
இவ்விழாவினை தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு பொருள்களை வழங்கினார். இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள, 489 தொழிலாளர்களுக்கு முதல்கட்டமாக தலைக்கவசம், கையுறை, உடை, காலணிகள் அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், தொழிலாளர்கள் நல உதவி அலுவலர் கிருஷ்ணவேணி உள்பட அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.