கரூர் மாவட்டம் ஈசநத்தம் பகுதியில் வசித்து வருபவர் ஃபெரோஸ் கான், இவரது மனைவி தையூரா தகசின் பானுக்கு (30) நேற்று முன்தினம் பிரசவ வலி காரணமாக ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஈசநத்தம் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை ஒரு மணியளவில் குழந்தைப் பெற்று எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பனிக்குடம் உடைந்து வெகுநேரமாகியும் பிரசவம் ஏற்படாததால், மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதன் மூலம் ஈசநத்தத்திலிருந்து கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் இன்று காலை 5 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.