கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவிலைச் சேர்ந்தவர், சிவகுமார் (52). இவரது மனைவி காந்தி (44). இருவரும் குடும்ப பிரச்சினையின் காரணமாக கடந்த 6 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். காந்தி மட்டும் தனியாக வெங்கமேடு பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் (மே.15) அரசு வழங்கும் கரோனா சிறப்பு நிதியான ரூ. 2 ஆயிரத்தை பெறுவதற்காக, காந்தி நியாயவிலைக்கடை வரிசையில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிவகுமார் கரோனா சிறப்பு நிதியைப் பெறுவது தொடர்பாக காந்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.