தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் ஆதரவற்றோர் மையத்தில் 18 பேருக்குக் கரோனா! - அன்புகரங்கள் ஆதரவற்றோர் மையம்

கரூர்: வெண்ணெய்மலை அன்புகரங்கள் ஆதரவற்றோர் மையத்தில் 18 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

covid 19 positive news karur
covid 19 positive news karur

By

Published : May 27, 2021, 4:13 PM IST

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி புதிதாக 73 பெண்கள், 100 ஆண்கள் என மொத்தம் 173 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது.

குறிப்பாக கரூர், வெண்ணெய்மலை 'அன்புக்கரங்கள்’ ஆதரவற்றோர் மையத்தில் 12 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 18 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்கள் அனைவருக்கும் கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற முதியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பின் அந்த வெண்ணெய்மலை ஆதரவற்றோர் மையத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றியதோடு, தெருக்கள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க:அத்தியாவசியப் பொருள்களின்றி அவதிக்குள்ளாகும் தும்பலஅள்ளி இலங்கை அகதிகள்!

ABOUT THE AUTHOR

...view details