கரூர் மாவட்டத்தில் கரோனா பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு மாவட்ட நிர்வாகம் முட்டை வழங்க ஏற்பாடு செய்திருந்தது.
முதற்கட்டமாக ஒரு நபருக்கு தலா 30 முட்டைகள் வீதம் 5,000 நபர்களுக்கு மொத்தம் 1,50,000 முட்டைகள் வழங்கும் பணியினை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சரின் சொந்த செலவில் வழங்கிய 50 ஆயிரம் முட்டைகளும், நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் மார்கெட்டிங் சொசைட்டியின் சார்பில் வழங்கிய 1 லட்சம் முட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் திருவிகா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கரூர் நகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: நாட்டுப் படகுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் மீன்பிடிக்க அனுமதி - தமிழ்நாடு அரசு