தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் உதவி காவல் ஆய்வாளர் உள்பட மூவருக்கு கரோனா உறுதி! - கரூர் கரோனா செய்திகள்

கரூர்: உதவி காவல் ஆய்வாளர் உள்பட மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona Confirm trio including SubInspector in Karur
Corona Confirm trio including SubInspector in Karur

By

Published : Jul 1, 2020, 6:12 PM IST

கரோனா தொற்றினால் நாளுக்கு நாள் கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதுவரை கரூர் மாவட்டத்தில் 42 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், இன்று கரூர் நகர உதவி காவல் ஆய்வாளர் உள்பட மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது.

கரூரின் மைய நகர் காவல் நிலைய துணை ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காவலர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி காவல் நிலையத்தை விட்டு வெளியே அமர்ந்து பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, கரூர் நகர காவல் நிலையம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் காவலர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பை முழுவதும் போக்க முடியாது - மாநகராட்சி ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details