தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்! - ஆயத்த ஆடைகள் விற்பனை

கரூர்: ஊரடங்கு தளர்வுகளில் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 2) நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்

By

Published : Sep 2, 2020, 2:56 PM IST

கரூர் மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக படுக்கை விரிப்பு, ஜமக்காளம், திரைச் சீலைகள், துண்டுகள், தலையனை உறைகள், கொசு வலைகள் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு மூன்றாயிரம் முதல் ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் தளம் கரூர்.

அதைப் போலவே இங்கு ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலும் வளர்ந்து வருகிறது. ஆனால், கரோனா நெருக்கடியினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இத்தொழில்களை சற்று சுணக்கமடையச் செய்தது. தற்போது மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், இதைப் பயன்படுத்தி ஆயத்த ஆடைகளின் உற்பத்தியைப் பெருக்குவது குறித்தும், அதிலிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கும் விதமாக ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 2) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரசு விதித்துள்ள சில கட்டுப்பாட்டுளை உற்பத்தி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு தேவையான கிருமிநாசினி முகக் கவசம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும். அதன் பிறகே பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.

தகுந்த இடைவெளியுடன் நடக்கும் ஆலோசனைக் கூட்டம்

ஒருவேளை ஊழியருக்கு கரோனா அறிகுறி காணப்பட்டால் அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:சுணங்கிய புதியம்புத்தூர் ரெடிமேட் ஜவுளி வியாபாரம் - வேதனையில் தொழிலாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details