தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்! - Tamil news

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில் 28 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

By

Published : Jun 11, 2021, 2:45 PM IST

கரூர்: கரூர்-கோயம்புத்தூர் சாலையில் உள்ள எல்.ஜி.பி பெட்ரோல் நிரப்பும் மையத்தின் முன்பு கரூர் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து, கரூர் - திருச்சி சாலையில் உள்ள லைட் ஹவுஸ் கார்னர் பெட்ரோல் நிரப்பும் மையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு கரூர் மாவட்ட துணைத்தலைவர் நாகேசன் தலைமை தாங்கினார்.

இதேபோல், காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கீர்த்தன் பெரியசாமி தலைமையில், 10க்கும் மேற்பட்டோர் விகேசி பெட்ரோல் நிரப்பும் மையத்தின் முன்பு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டத்தில் இன்று(ஜூன்.11) ஒரே நாளில் லாலாப்பேட்டை தோகமலை, பாலவிடுதி, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், வேலாயுதம்பாளையம், வெள்ளியணை உள்ளிட்ட 28 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: உச்சம் தொட்ட தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details