தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் ஜன. 25ஆம் தேதி ராகுல்காந்தி சுற்றுப்பயணம் - கே.எஸ். அழகிரி - ks alagiri

கரூர்: காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வரும் 25ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

கரூர்
கரூர்

By

Published : Jan 21, 2021, 7:51 AM IST

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யும் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி இறுதியாக கரூர் மாவட்டத்தில் பரப்புரை செய்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, "கரூரில் 6 நிகழ்வுகளில் பங்கேற்கும் ராகும் காந்தி, விவசாயிகளுடன் கலந்துரையாடவுள்ளார். பாஜக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்கும் வகையில் சிறுபான்மையினர் மத்தியில் கலந்துரையாடல் செய்கிறார். விவசாயிகளின் பிரச்னை பாஜக ஆட்சி காலத்தில் அதிகரித்துள்ளது.

விவசாயத்தை பாதுகாக்க சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை காங்கிரஸ் ஆட்சியில் நடைமுறைபடுத்தும் நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் விளைபொருளுக்கு அடிப்படை ஆதாரங்கள் கேள்விக்குறியாக உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளை நிர்பந்தம் செய்ய வழிவகை செய்கிறது. மேலும், புதுச்சேரியில் 30 இடங்களிலும் திமுக போட்டியிடுகிறது" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details