கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி, அந்தத் தொகுதிக்கு உட்பட்ட பெரிய திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்தார்.
'மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும்' -ஜோதிமணி நம்பிக்கை - thambidurai
கரூர்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரூர் மக்களவைத் தொகுதி முழுவதும் அமைதியாகவும், ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் வகையிலும் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறுவோம். தேர்தல் அமைதியாக நடக்க கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார் என்று நம்பிக்கை உள்ளது" என்றார்.